எந்தன் தேவனால்

எந்தன் தேவனால் எந்தன் தேவனால்
நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்
உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்
உந்தன் வழிகளில் நான் நடந்திடுவேன்

1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாய் இருப்பேன்
வேலையிலும் ஆசீர்வாதமாய் இருப்பேன் (2)
என் வீட்டில் ஆகாரம் குறையில்லையே
என் தேவைகள் ஒன்றுமே தடையில்லையே (2)

2. எனக்கெதிராய் வரும் ஆயுதம் எல்லாம்
நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால் (2)
என் பெலன் ஆரோக்கியம் இயேசு தானே
எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் (2)

3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்
எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும் (2)
எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்
என்னை அவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் (2)

4. இனி என்றும் கடன் வாங்க விட மாட்டார்
கொடுத்ததைச் செழித்தோங்கச் செய்திடுவார் (2)
உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே
உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் (2)