மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்புத் தாருமே - இறைவா
மன்னிப்புத் தாருமே - இறைவா
1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்
மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்
அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில்
வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்
2. என் சொத்தை தந்திடும் என்று கேட்டான்
தன் சொத்தைப் பெற்றவன் பயணமானான்
தன் இஷ்டம் போலங்கே செலவு செய்தான் - அவன்
தன் வாழ்வைப் பாவத்தில் மூழ்கடித்தான்
3. பன்றிகள் மேய்த்தவன் தவிடு உண்டான்
தன் தந்தை அன்பினைக் கனவு கண்டான்
மன்னிப்பு கேட்டங்கே ஓடிவந்தான் - தந்தை
மன்னித்து மகனாக அணைத்து ஏற்றார்
4. ஆண்டவர் ஞானத்தில் இனிமையுண்டு
கண்டிக்க காலத்தைக் கடத்துகின்றார் கண்டித்து
கருணைசொல் கூறுகின்றார் - பாவி
திருந்திட அருட்கொடை வழங்குகின்றார்
5. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்
நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்
குற்றங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தால் - தேவன்
குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்!