ஸ்தோத்தரிப்பேன் தேவனை

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2)

1. என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் - (2)
களிமண்ணை எடுத்து பாத்திரமாக
என்னையும் வனைந்து உருவாக்கினீர்
நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
என்னையும் உமக்காய் படைத்தீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

2. அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் - (2)
மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

3. அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன் - (2)
உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்