விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

பல்லவி

விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

சரணங்கள்

1. தடுக்கும் பாவத் தளைகளில் - விடுதலை
கெடுக்கும் தீய பழக்கத்தில் - விடுதலை
என்ன சந்தோஷம் இந்த - விடுதலை (2)
எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்

2. எரிக்கும் கோபப் பிடியினில் - விடுதலை
வதைக்கும் தீய பொறாமையில் - விடுதலை
அன்பர் இயேசுவே தந்த விடுதலை
இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே - விடுதலை

3. அடுக்காய் பேசும் பொய்யினில் - விடுதலை
மிடுக்காய் வீசும் பெருமையில் - விடுதலை
ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே