மா தயவே தேவ தயவே
மானிலத்தில் தேவை எனக்கே

1. வாக்களித்த வானபரன்
வாக்கு மாறார் நம்பிடுவேன்
நம்பினோரைக் கைவிடாரே
நர்பாதமே சரணடைந்தேன் --- மா

2. ஏசுவின் பொன் நாமத்தினால்
ஏதென்கிலும் கேட்டிடினும்
தம் சித்தம் போல் தந்திடுவார்
தந்தையிவர் எந்தனுக்கே --- மா

3. சத்துருக்கள் தூஷித்தாலும்
சக்தியீந்தென பட்சம் தந்திடுவார்
ஆதரவே அளித்திடுவார்
ஆறுதலாய் வாழ்ந்திடுவேன் --- மா

4. என்னில் ஏதும் பெலனில்லையே
எந்தனுக்காய் இராப்பகலாய்
நீதியுள்ள நேசர் இயேசு
நித்தியமாய் பரிந்துரைப்பார் --- மா

5. தாய் வயிற்றில் இருந்த முதல்
தமக்கே என்னை தெரிந்தெடுத்தார்
என் அழைப்பும் நிறைவேற
எப்படியும் கிரியை செய்வார் --- மா

6. தம் வருகை தரணியிலே
தாமதமாய் நடந்தினும்
சார்ந்தவரை அனுதினமும்
சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன் --- மா