உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே (2)
நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
நீரே என் வழியையா

உம்பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்
நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
நீரே என் வழியையா

என் காலை மான் காலாய் மாற்றி (மாற்றி )
மதிலை தாண்டசெய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைகட்டி
வழியை செவ்வையாக்கினீர்
நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
நீரே என் வழியையா

ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் (முன்பாய்)
ஓடிடக் காணச் செய்தீர்
நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
நீரே என் வழியையா