தீய மனதை மாற்ற வாரும்

பல்லவி

தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே - கன
நேய ஆவியே

சரணங்கள்

1. மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்
பாவி நான் --- தீய

2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே - மருள்
தீர்க்கும், தஞ்சமே --- தீய

3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா - ஒரு
பாவி நான் ஐயா --- தீய

4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே - தினம்
இதயம் அஞ்சவே --- தீய

5. புதிய சிந்தை, புதிய ஆசை புதுப்பித்தாக்கவே - அதைப்
புகழ்ந்து காக்கவே --- தீய

6. கிறிஸ்து மீது நாட்டங் கொண்டு கீதம் பாடவே - அவர்
கிருபை தேடவே --- தீய

7. தேவ வசனப் பாலின்மீது தேட்டம் தோன்றவே - மிகு
தெளிவு வேண்டவே --- தீய

8. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப் போற்றவே - மிக
சிறப்பாய் ஏற்றவே --- தீய