அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்

1. பண்புறு ஞானம் - பரம நம்பிக்கை,
இன்ப விஸ்வாசம் - இவைகளிலெல்லாம்

2. பலபல பாஷை - படித்தறிந்தாலும்,
கல கல வென்னும் - கைம்மணியாமே

3. என் பொருள் யாவும் - ஈந்தளித்தாலும்,
அன்பிலையானால் - அதிற்பயனில்லை

4. துணிவுடனுடலைச் - சுடக்கொடுத்தாலும்,
பணிய அன்பில்லால் - பயனதிலில்லை

5. சாந்தமும் தயவும் - சகல நற்குணமும்,
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள

6. புகழிறு மாப்பு - பொழிவு பொறாமை,
பகைய நியாயப் - பாவமுஞ் செய்யா

7. சினமடையாது - தீங்கு முன்னாது,
தினமழியாது - தீமை செய்யாது

8. சகலமுந் தாங்கும் - சகலமும் நம்பும்,
மிகைபட வென்றும் - மேன்மை பெற்றோங்கும்