கர்த்தரின் பந்தியில் வா

பல்லவி

கர்த்தரின் பந்தியில் வா - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா

அனுபல்லவி

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி --- கர்த்தரின்

சரணங்கள்

1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப்
பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட --- கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே --- கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன்
ஐக்யப் பந்தியாமே
துன்பம் துயர் போமே - இருதயம்
சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா --- கர்த்தரின்