அனந்த ஞான சொரூபா

பல்லவி

அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!

சரணங்கள்

1. கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே - நரர்
காண வந்தாரே - பரன் நரர் காண வந்தாரே
கருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா!

2. அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா - எமை
ஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,
ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா!

3. ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே - நரர்க்
கன்பு கூர்ந்தாரே - பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,
கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா!

4. பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே - எமைப்
பார்க்க வந்தாரே - பரன் எமைப் பார்க்க வந்தாரே,
பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா!