Praise & Worship (Pastor. Jacob Koshy) - Volume 1


1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்

2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியிலே சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்யும்

நானிருப்பேன் நடுவிலென்றார் நாயகன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்

உந்தன் மனை திருச்சபையை உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய்தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் நல்லவரே வல்லவரேஅசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிரப்பிடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால்என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது

தேவ கிருபை என்றுமுள்ளது
அவர் கிருபை என்றுமுள்ளது
அவரைப் போற்றித் துதித்துப் பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

ஜெயம் தந்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளதுஇயேசுவே ஆண்டவர்
மரணத்தில் நின்று
உயிர்த்தெழுந்தார்
நாவு யாவும் போற்றட்டும்
கால்கள் யாவும் அடங்கும்
இயேசுவே என் ஆண்டவர்திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்

புது வாழ்வு எனக்கு தந்தார்
சமாதானம் நிறைவாய் அளித்தார்
பாவங்கள் யாவும் மன்னித்தார்
சாபங்கள் யாவும் தொலைத்தார்

கல்வாரி மீதில் எனக்காய்
தம் உதிரம் சிந்தி மரித்தார்
மூன்றாம் நாளில் உயிர்த்தார்
உன்னதத்தில் அமர்ந்தார்

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்
இயேசுவே ஒளி நித்யம் தேவன்

நல் மேய்ப்பனாக காத்தார்
எனை தமையனாகக் கொண்டார்
என் நண்பனாக வந்தார்
என் தலைவனாக நின்றார்

மேகங்கள் மீதில் ஓர்நாள்
மணவாளனாக வருவார்
என்னை அழைத்துக் கொள்வார்
வானில் கொண்டு செல்வார்தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே

நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே

தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீனம் சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமேஇரத்தம் ஜெயம் (7)ஆமேன் அல்லேலூயா (4)
ஆமேன் அல்லேலூயா (4)
என் பெலன் இயேசுவுக்கே
என் மனம் இயேசுவுக்கே
என் பணம் இயேசுவுக்கே
இயேசு எனக்காக
ஆமேன் அல்லேலூயா (4)இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிட மாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ?
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் - ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதேகர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
துதிப்பேன் நான் தாவீதைப்போல்
துதிப்பேன், துதிப்பேன், துதிப்பேன்
நான் தாவீதைப் போல்சகாயரே தயாபரரே
சிநேகிதரே சிருஷ்டிகரே
இருந்தவரே இருப்பவரே
இனிமேலும் வருபவரே

உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப் பார்த்து
என் இதயம் துள்ளுதையா

இருப்பவரே இருந்தவரே
இனிமேலும் வருபவரே
நன்றி நன்றி (2)

நல்லவரே வல்லவரே
காண்பவரே காப்பவரே
நன்றி நன்றி (2)தேவனே நான் உமதண்டையில்
இன்னும் நெருங்கி சேர்வதே
என் ஆவல் பூமியில்