Praise & Worship (Pastor. Jacob Koshy) - Volume 2


ஸ்தோத்திரம் இயேசுநாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசுநாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில் !

வான தூதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு !

இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே !

இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் !

நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே !நேற்றைய துயரமெல்லாம்
இன்று மறைந்ததையா
நிம்மதி பிறந்ததையா – அது
நிரந்தரமானதையா
கோடி கோடி நன்றி டாடி (3)

நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே
என் அப்பா உம் திருப்பாதமே

இரவெல்லாம் காத்தீர்
இன்னும் ஓர் நாள் தந்தீர்
மறவாத என் நேசரே
உறவாடி மகிழ்ந்திடுவேன்
கோடி கோடி நன்றி டாடி (3)

நல்லவரே உமக்குத்தான் அதிகாலை ஆனந்தமே
என் அப்பா உம் திருப்பாதமேவரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் மத்தியிலே
வரவேண்டும் தேவ ஆவியே
எங்கள் உள்ளத்திலே

ஆட்கொள்ளும் ஐயா
அபிஷேகியும்
அனல் மூட்டி
எரிய விடும்தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் நல்லவரே வல்லவரேசீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும்
இந்த வேளையிலே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

பத்மு தீவினிலே பக்தனை தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும்
இந்த வேளையிலே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலேதேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்

சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம் --- தேவா

கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம் --- தேவா

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு (2)

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழை இல்லை பணக்காரனில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதய்யா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா

வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித் துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே

அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மை பிரியேன் ஐயா
சித்தமே செய்து சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனைகாக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்புவேன் இயேசுவை, நம்புவேன் இயேசுவை

கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் உன்னைக் கரம் பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போல எழும்பிடுவாய்

நம்புவேன் இயேசுவை, நம்புவேன் இயேசுவை

அத்திமரம் துளிர்விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டுப் போவதில்லை

நம்புவேன் இயேசுவை, நம்புவேன் இயேசுவைவாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்

தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே --- அவர்

தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் --- அவர்

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்

உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமேபரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமேவிசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய்கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் தீரும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்

தேவ சித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே - (2)

கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் தீரும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்