Praise & Worship (Pastor. Jacob Koshy) - Volume 5


மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த

அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே - இந்த

எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்

இயேசுவே (3) என் இயேசுவே

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்கல்வாரி திருப்பீடமே
கறைப் போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப்பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே

தெய்வீகக் கூடாரமே – என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரியவிடும்

மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கேஎத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்

இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே

உள்ளமெல்லாம் உருகுதையா
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே

கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவர்
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்த மாக்கிக் கொண்டீரேநன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

நன்றி உள்ளம் நிறைவுடன்
நன்றி பரிசுத்தத்தில்
நன்றி தேவக்குமாரன் இயேசுவை தந்தார்

பலவீனன் பலவான் என்று சொல்வான்
தரித்திரன் செழித்திடுவான்
தேவனின் செயல் இதுவே
நமக்காய், நன்றிஎல்லாம் இயேசுவே
எனக்கெல்லாம் இயேசுவே
தொல்லை மிகும் இவ்வுலகில்
துணை இயேசுவேஎல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே

He is my everything, He is my all
He is my everything , both great and small
He makes my life complete, makes everything new
He is my everything, He is my allமகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ!

ஆராதனை - ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கேயாத்திரை செய்வேன் நான் குருசை நோக்கி
யுத்தம் செய்வேன் என் இயெசுவுக்காய்
ஜீவன் வைத்திடுவேன் என் இரட்சகருக்காய்
கடைசி மூச்சு வரைக்கும்நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா (2)

நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம்
எனது எல்லாவற்றிலும்

நான் உம்மை நேசிப்பேன் இயேசுவே (2)ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவத்தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர்
தேவனே நீர் வல்லவர்

பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

வாக்குத்தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயமேற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவர் பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவர் பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

என் ஆத்ம நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சம்மதிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவர் பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்

இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசிமட்டும் காத்திருப்போம்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார்
அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர்

நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவை துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன்

கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள்தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார்

நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரேவிசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே --- (3)

உன்னை உண்டாக்கியவர்
உன்னை சிருஷ்டித்தவர்
உன் முன்னே நடந்து செல்கிறார்
தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதுகர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார்

நீதிமானின் சிரசின்மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமேபொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலன் அளிப்பார்

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே

முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்

தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதேபலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை

ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும்we worship you oh Lord!
we adore you oh Lord!
we worship you oh Lord!
we adore you oh Lord!

என்னை உடைத்து உருவாக்கும் என் தெய்வமே
உமக்குத்தான் ஆராதனைஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ் நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்